Hi All,

On behalf of VGLUG Foundation (A non-profit organization offering free computer education since 2013), we invite you to explore the world of computer software and gain economic freedom!

Join us at the Software Freedom Day Exhibition 2024 on September 22, 2024, at Saradha Vidyalaya Higher Secondary School, Villupuram, from 9 AM to 4 PM.

At the exhibition, you’ll learn about different Free and Open source software tools and how to use the Internet safely.

The event includes educational stalls that aim to help school and college students, homemakers, and working professionals understand how computers can make their daily tasks easier.

The highlights include sessions by IT experts from Chennai and Bangalore who'll explore these subjects and share their industry experience.

As we celebrate our 11th year, this exhibition will give you a glimpse into the latest technologies.

Bring your friends and family to learn about the future of technology!


Thanks



2013 ஆண்டு முதல் கட்டணமில்லா கணினி கல்வியை வழங்கிவரும் VGLUG பவுண்டேசன் சார்பாக,


கணினி மென்பொருட்களை கற்போம்! பொருளாதார விடுதலை பெறுவோம்!


என்கிற நோக்கில் நடத்தப்படுகின்ற இலவச கணினி மென்பொருள் கண்காட்சி 2024 விழுப்புரத்தில் சாரதா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 22-09-2024 அன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

கணினி குறித்த தெளிவையும் , மென்பொருட்கள் (software ) குறித்த விரிவான விளக்கங்களையும், மேலும் பாதுகாப்பான முறையில் இணையத்தை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வையும் இக் கண்காட்சி வழங்க இருக்கிறது .

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், இல்லத்தரசிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் தங்களது அன்றாட பணிகளை கணினி வழியில் எவ்வாறு எளிதாக செய்வது என்கிற விளக்கங்களை அளிக்க பிரேத்தேக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பணிபுரியும் ஐ. டி (IT) ஊழியர்கள் பங்கேற்று இக்கண்காட்சியில் விளக்கம் அளிக்க உள்ளனர்.

11- வது ஆண்டாக நடைபெற இருக்கும் முழு நாள் நிகழ்வான இந்த கணினி மென்பொருள் கண்காட்சி நவீன தொழில்நுட்பங்கள் குறித்த உங்களது பார்வையை விசாலாபடுத்தும். குடும்பத்துடன் வருகைதந்து எதிர்காலத்திற்கான தொழில்நுட்பங்களை அறிந்து செல்லலாம்…


அனைவரும் வாரீர்!!!

ஆதரவு தாரீர்!!!!

நன்றி


VGLUG பற்றி மேலும் அறிய: 
https://vglug.org